ஆண்டிப்பட்டி திருத்தலம் வரலாறு

Longtail boat in Thailand

கி.பி 1684-ல் தென் தமிழகத்தின் மிகப்பெரிய மறைப்பணித்தளமாக காமநாயக்கன்பபடி உருவானது. தெற்கே இராஜாவூர் வரை அது நீண்டிருந்தது. கிளைப்பங்குகளாக, 1 ஆண்டிப்பட்டி. 2. தென்காசி 3 சேர்ந்தமரம் 4 வடக்கன்குளம், 6. அணைக்கரை 6.இராஜபாளையம், 7.திருவில்லிபுத்தூர் ஆகியவை இருந்தன. காமநாயக்கன்பட்டியில் பணிபுரிந்த அருட்தந்தை ஜோசப் வியாரா - உடன் 1711 முதல் 1714 முடிய அருட்தந்தை பெஸ்கி (வீரமாமுனிவர்) இணைந்து பணியாற்றினார். 21.12.1714 அன்று ஆண்டிப்பட்டியில் தோமையார் திருவிழாவை நிறைவேற்றி, கிறிஸ்துமஸ் விழா தயாரிப்பில் ஈடுபட்ட பொழுது, ராணிமங்கம்மாள் படையினரால் கைது செய்யப்பட்டார். தமிழறியா நிலையில், இலத்தினில் பேசிய அவரை பில்லி சூனியராக பாவித்து மரண தண்டனைக்கு தீர்ப்பிட்டனர். எட்டையபுரம் ஜமீன் ராஜாவின் விவசாயப் பண்ணை அதிகாரி திரு சங்கரப்ப நாயக்கரின் குறுக்கிட்டால் பெஸ்கி தப்பினார். மனவேதனையுடன் காமநாயக்கன்பட்டி சென்று கொப்பம்பட்டியில் தமிழ் கற்றார். பெஸ்கி-வீரமாமுனிவர் ஆனார் தமிழறியாதவர் தமிழை வளர்த்தார் புரியாத சடங்குளை இந்தி யமயமாக்கினார். வீரமாமுனி தமிழறிஞராகிட ஆண்டிப்பட்டி ஒரு முக்கிய காரணமாகும். கி.பி) 1630ம் ஆண்டிலேயே அடைக்கல அன்னைக்கு ஆலயம் இங்கு கட்டப்பட்டுள்ளது. 1713 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் திருப்பலி நிறைவேற்றிய ஆலயமும் இதுவாகும். வீரமாமுனியை காப்பாற்றிய அன்னையின் அருள் இன்றும் பல புதுமைகளை செய்து வருகிறது வானம் பிளந்து மன்னா கொட்டியதுபோல-பூமி பிளந்து தரையில் இருந்து எண்ணெய் வரும் அதிசயம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. 30.01.2016 அன்று சுருபத்தின் அடியில் எண்ணெய் ஊறியிருந்தது. அதை சுத்தம் செய்த பொழுது மீண்டும் மறுநாள் எண்ணெய் வந்ததால், 01.02.2016 அன்று இரவு 12.00 மணி வரை சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது. எதிர்பார்த்தது போல 02.02.2016 அன்று அதிக அளவில் எண்ணெய் வந்தது. சில நாட்கள் கழித்து 28,02 2016 அன்று சுருபத்தை கண்ணாடி கூண்டுக்குள் வைத்த பொழுது எண்ணெய் நின்று போனது O1.03, 2016 அன்று மீண்டும் சுருபத்தை வெளியில் வைத்தவுடன் எண்ணெய் வந்தது. 24,25,26-03-2016 ஆகிய புனித வார நாட்களில் சுருபங்கள் மூடப்பட்ட பொழுது எண்ணெய் நின்று போனது. 27.03.2016 ாஸ்டர் அன்று சுருபங்கள் திறக்கப்பட்டன. எண்ணெய் மீண்டும் வர ஆரம்பித்தது. 02.02.2019.02.02.2020 மற்றும் 02.02.2021 என அதிசய எண்ணெயின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா மக்களின் நேர்ச்சை காணிக்கைகளோடு சிறப்பாக நடைபெற்றது. இவ்வாறு அதி சய எண்ணெய் தந்து மக்களின் மகிழ்ச்சியில் தன்னை ஐக்கியமாக்கும் ஆண்டிப்பட்டி திருத்தல் நாயகியின் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்.

மாதா சுரூபத்தின் அடியில் தரையில் அதிசய எண்ணெய் ஊற்று

Longtail boat in Thailand

இந்த ஆலயம் கி.பி. 1630-ல் கட்டப்பட்டது. தமிழ் வளர்த்த வீரமாமுனிவர் (பெஸ்கி) பணிபுரிந்த இடம். சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் சிறிஸ்தவர்கள் மட்டும் இன்றி பிற மதத்தவரும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்நிலையில் 30-01-2016 அன்று கோயில் சுத்தம் செய்யும் போது, கோயில் உட்புறம் மாதா சுரூபத்தில் கீழ் எண்ணெய் கசிந்திருப்பதை பார்த்து அதை துடைத்துவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது சுருபத்தை சுற்றி எண்ணெய் அதிக அளவில் தேங்கி இருந்துள்ளது. அதை சுத்தம் செய்ய திரும்பவும் எண்ணெய் ஊற்றாக வந்துள்ளது. இதைப் பார்த்த ஊர்மக்கள் 01-02-2016 அன்று இரவு 11.30 மணி வரை பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியை பொதூபக்களிடம் தெரியப்படுத்தவேண்டும் என்றால் இந்த எண்ணெய் ஊற்று அதிக அளவில் வரவேண்டும் என்று அடைக்கல அன்னையிடம் பிரார்த்தனை செய்து சென்றனர். மறுநாள் அன்னையிடம் வேண்டியது போலவே அதிக அளவில் அதிசய எண்ணெய் நிரம்பியிருந்தது. பெரிய வியாழன், பெரிய வெள்ளி அன்று மாதா சுரூபங்கள் மூடப்பட்டபோது எண்ணெய் வரவில்லை. அதன் பிறகு இயேசு உயிர்ப்புப் பெருவிழா அன்று 3-ம் நாள் எண்ணெய் வந்தது. அதிசய எண்ணெய் ஊற்று தளர்ந்த விசுவாசத்தை ஊக்கப்படுத்தி அன்னையின் உடனிருப்பை உறுதி செய்கிறது. அடைக்கல அன்னையின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை திருவிழா, நவநாள் திருப்பலி, தேர் பவனி நடைபெறும்

Description of Photo